ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.இவர்களில் ஒருவரான ராபர்ட் பயஸ் பரோல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.இந்த மனுவில் மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாட்கள் பரோல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிறைத்துறை பரோல் மனுவை நிராகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இவர் மீதான வழக்கின் விசாரணை நடைபெற்றது.அதில் சென்னை உயர்நீதிமன்றம் , ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் நளினி சிறையில் இருந்து வெளியே வந்தபோது பின்பற்றிய விதிகளை பின்பற்றவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…