சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜராகியுள்ளார்.
சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பியாக இருக்கக்கூடிய ராஜேஷ் தாஸ் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி அந்த பெண் எஸ்.பி, உள்துறைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். பெண் ஐ.பி.ஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, 6 பேர் கொண்ட குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்திருந்தது. இதையடுத்து, சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக திரிபாதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதைத்தொடர்ந்து, டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான புகாரை விசாரிக்க விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டார்.
பின்னர் அவர் மாற்றப்பட்டு சிபிஎஸ்டி எஸ்பி முத்தரசி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பெண் ஐபிஎஸ் அதிகாரி கூறிய பாலியல் புகார் குறித்து விசாரணைக்காக சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ராஜேஷ் தாஸ் ஆஜராகியுள்ளார். சிறப்பு டிஜிபியை இதுவரை பணியிடை நீக்கம் செய்யாதது ஏன்..? என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பிய நிலையில் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…