நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பரையும், கட்சியின் மேற்பார்வையாளராக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியனையும் நியமனம் செய்வதாக ரஜினி அறிவித்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்.கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை, ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை.தேர்தல் அரசியலுக்கு வராமல் என்ன சேவையை செய்ய முடியுமோ அதை செய்வேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…
டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…
சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…
ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக், இனிப்புகளின் பெயர்களை…
சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…