ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.இவர்களில் ஒருவரான ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க கோரி அவரது அம்மா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார் .அந்த மனுவில், எனது மகன் ரவிசந்திரனுக்கு நீண்டகால பரோல் வழங்கவேண்டும்” என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை ,15 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்தது.அதாவது ஜனவரி 10 -ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை ரவிச்சந்திரனுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சாதாரண விடுப்பு வழங்கியிருந்தது.இதனால் ரவிச்சந்திரன் 15 நாட்கள் பரோல் விடுப்பில் சிறையிலிருந்து புறப்பட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.இந்நிலையில் இன்றுடன் அவரது பரோல் முடிந்த நிலையில் துப்பாக்கி இந்திய போலீஸ் பாதுகாப்பதுடன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார் ரவிச்சந்திரன்.
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 14…
மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10…
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…