நியாய விலைக் கடைகளில் போலிப் பட்டியல் மட்டுமின்றி அதிக இருப்பு வைத்தாலும் குற்றமே… பதிவாளர் சுற்றறிக்கை…

Published by
Kaliraj

தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு. இல.சுப்பிரமணியன், அவர்கள்  அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், கூறப்பட்டு இருப்பதாவது, நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள் இழப்பு, முறைகேடு மற்றும் இருப்பு அதிகம் வைத்தல் ஆகியவை தொடர்பாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பை, சம்பந்தப்பட்ட  நியாய விலைக் கடை பணியாளரிடம் இருந்து வசூலிக்க உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.பொருள் விற்பனை முனை எந்திரத்தையும், உண்மை இருப்பையும் சரிபார்க்கும்போது கூடுதல் இருப்பு காணப்பட்டால், குடும்ப அட்டைதாரருக்கு தெரியாமல் கடைப் பணியாளர் போலி பட்டியல் தயாரித்ததாகவும், பொருள் வினியோகம் செய்யும்போது எடை குறைத்து கொடுத்ததாகவும் தான் கருத வேண்டும். உணவு பாதுகாப்புக்காக அதிக மானியத்துடன் வழங்கும் அத்தியாவசிய பொருட் களை உரிய முறையில் பயனாளிகளுக்கு வழங்காததும், எடை குறைத்து விற்பது அல்லது போலிப் பட்டியல் வாயிலாக பொருட்களை திருடுவதும் தீவிர முறைகேடுகளாகும்.

இதனால்தான் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் கூடுதல் இருப்பு நேர்கிறது. எனவே, போலிப்பட்டியல் மூலம் அத்தியாவசிய பொருட்கள் திருடப்படும் குற்றம் போலவே இந்த செயலும் கருதப்பட்டு அபராதத் தொகையை தொடர்ந்து வசூலிக்க உத்தரவிடப்படுகிறது. அபராத தொகையை வட்டம் அல்லது மண்டல அலுவலர் உடனடியாக வசூலித்து அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும். போலி பட்டியலுக் கான அபராதத் தொகையை வசூலிக்க வழங்கப்பட்ட அதே நடைமுறை, பொருள் இருப்பு அதிகம் காணப்படும் இனங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

4 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

5 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

6 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

7 hours ago