3 நாட்கள் நடைபெறும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரும் 14-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 14 -ஆம் தேதி முதல் 16 -ஆம் தேதி நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின் படி, 14.9.2020 திங்கட்கிழமை அன்று இரங்கல் குறிப்புகள் நடைபெறுகிறது .
இரங்கல் குறிப்புகள் :
சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து நடைபெறும்.
இரங்கல் தீர்மானங்கள் :
1.திரு. பிரணாப் முகர்ஜி, இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அவர்கள் மறைவு குறித்து நடைபெறவுள்ளது.
2.திரு. ஜெ. அன்பழகன் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் அவர்கள் மறைவு குறித்து
3. திரு. எச். வசந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர் அவர்கள் மறைவு குறித்து
4.கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் காரணமாக உயிரிழந்தவர்கள் குறித்து அரசினர் அலுவல்கள்.
15.9.2020 அன்று அரசினர் அலுவல்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
16.9.2020 அன்று :
(1) 2020-2021-ஆம் ஆண்டிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளித்தல்.
(2) 2020-2021-ஆம் ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு (விவாதமின்றி)
(3) 2020-2021-ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்தல் மற்றும் ஆய்வு செய்து நிறைவேற்றுதல் (விவாதமின்றி)
(4) சட்டமுன்வடிவு கள் ஆய்வு செய்தலும், நிறைவேற்றதலும்
(5) ஏனைய அரசினர் அலுவல்கள் பேரவை வழக்கம்போல் காலை 10.00 மணிக்குக் கூடும் என் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…