பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ம் கல்வியாண்டில் மார்ச் மாதத்தில் நடைபெற்ற தேர்வில் மேல்நிலை முதலாமாண்டு (அரியர்) மற்றும் இரண்டாமாண்டு பொது தேர்வு எழுதிய மாணவர்களில் சிலரது விடைத்தாள்களில் உள்ள மதிப்பெண்களை மறுக்கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்த விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண்கள் மாற்றம் உள்ள மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்த மாணவர்களில் மதிப்பெண்களில் மாற்றமுடையவர்களின் பதிவெண்களின் பட்டியல் இன்று பிற்பகல் 2 மணிக்கு https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் பதிவெண்கள் இல்லாத மாணவர்களின் மதிப்பெண்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், மதிப்பெண் மாற்றமுடைய மாணவர்கள் உடனடியாக மேற்கண்ட இணையதளத்தில் தங்களது பதிவெண்கள் மற்றும் பிறந்ததேதியை பதிவு செய்து திருத்தப்பட்ட மதிப்பெண்களுடன் கூடிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…