பழனி முருகன் கோவிலில் டிசம்பர் 28 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மீண்டும் ரோப் கார் சேவை இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய தளர்வுகளின்படி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில்கள் திறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவக்கூடும் என்பதால் மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 28 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மீண்டும் ரோப் கார் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதர நாட்களில் காலை 7 மணிமுதல் பிற்பகல் 1.30 மணி வரை ரோப் கார் சேவைகள் இயக்கப்படும். அதன்பின் பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் பிற்பகல் 2.30 மணி முதல் 7.30 மணிவரை இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
அதுமட்டுமின்றி, www.tnhrce.gov.in என்ற வலைத்தளம் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு 1,500 பக்தர்களுக்கு மட்டுமே ரோப் காரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…