பெட்ரோல் மீதான லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5, டீசல் விலை ரூ 3 குறைக்கப்படும்” என அறிவித்தனர். சமீபத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, பெட்ரோல் டீசல் மீதான வரியில் மத்திய அரசு அதிக பங்கை எடுத்துக் கொள்கிறது. அதனால், பெட்ரோல் டீசல், விலையை குறைக்க தற்போது சாத்தியமில்லை என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் பல விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில், நேற்று தமிழக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஏழை நடுத்தர மக்களின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியில் ரூ. 3 குறைக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதனால், பெட்ரோல் மீதான வரி குறைப்பால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்.
எனினும், பெட்ரோல் வரி குறைப்பு உழைக்கும் நடுத்தர குடும்பங்களுக்கு நிவாரணமாக அமையும் என தெரிவித்தார். இந்நிலையில், பெட்ரோல் மீதான லிட்டருக்கு ரூ.3 விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49 க்கு விற்கப்படும் நிலையில் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…
சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…