ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் மட்டுமே இடம்பெறும் – நீதிமன்றத்தில், மத்திய அரசு தகவல்!

மகாத்மா காந்தி படத்தை தவிர வேறு படத்தை பதிவு செய்ய இயலாது என குழுவினர் பரிந்துரைத்தது என்று மத்திய அரசு தகவல்.
இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படத்தை அச்சடிக்க உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளை வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணையில், ரூபாய் நோட்டுகளில் வேறு எந்த இந்திய தலைவர்களின் படங்களை பதிவு செய்தால் சாதி, மதச்சாயம் பூசப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவித்தது.
மேலும், ரூபாய் நோட்டுகளில் வேறு தலைவர்களின் படங்களை பதிவு செய்வது குறித்து 2010ல் குழு அமைத்து பரிசீலிக்கப்பட்டது என்றும் மகாத்மா காந்தி படத்தை தவிர வேறு படத்தை பதிவு செய்ய இயலாது என குழுவினர் பரிந்துரைத்தது எனவும் மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025