Annamalai, BJP Stale President [Image source : The Hindu]
தமிழகத்தில் இருந்து ஏதாவது ஒழிக்கப்பட வேண்டுமெனில், அது திமுக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், D-டெங்கு, M-மலேரியா, K-கொசு என திமுகவை விமர்சனம் செய்துள்ளார். வரும் தேர்தலில், ‘சனாதன தர்மத்தை’ முன்னிறுத்தி, களத்தில் போராடுவோம். சனாதன தர்மத்தை ஒழிக்கப்போவதாக திமுக சொல்கிறது, அதனால், சனாதன தர்மத்தை காப்போம் என்று சொல்வோம்.
இதனால், தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். திமுகவின் நாடகம் பல ஆண்டுகளாக நமக்குத் தெரியும். நீங்கள் ஆட்சிக்கு வந்த முதல் வருடம் ‘சனாதன தர்மத்தை’ எதிர்க்கிறீர்கள், இரண்டாவது வருடம் ‘சனாதன தர்மத்தை’ ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். மூன்றாம் ஆண்டு ‘சனாதன தர்மத்தை’ கொடூரமாக வேரறுக்க நினைக்கிறீர்கள்.
நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டு இந்து என்று சொல்கிறீர்கள். திமுக கட்சிக்காரர்களில் 90% இந்துக்கள் என்று சொல்கிறீர்கள். எனவே, 2024ல் திமுக என்ற கட்சி அழிந்துவிடும். டி என்றால் டெங்கு, எம் என்றால் மலேரியா, கே என்றால் கொசு என விமர்சித்துள்ளார். இனி வரும் காலங்களில் இந்த கொடிய நோய்களை மக்கள் திமுகவுடன் தொடர்பு படுத்துவார்கள் என்பதில் உறுதியாக உள்ளோம். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்றைய அறிக்கைக்கு எனது விரிவான மறுப்பு இதோ என அண்ணாமலை பேசியுள்ள வீடியோவையம் வெளியிட்டுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…