அரசு பள்ளியில் முதல் முதலாக சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரம்

By

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்களில் முதல் முதலாக ராமநாதபுரத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் 350 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில், 150 பேர்  மாணவிகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சுகாதாரத்துறை மூலம் சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை, அனைத்து பள்ளிகளிலும் நாப்கின் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த பள்ளியில் அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரமும் வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் சானிட்டரி நாப்கின் எரியூட்டும் பயன்படுத்தும் முதல் பள்ளி என்ற பெயரை பெற்றுள்ளது.

Dinasuvadu Media @2023