சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி இன்று பதவியேற்க உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி மேகாலயாவில் உள்ள தலைமை நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார்.ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்தார்.அவர் பதவியை ராஜினாமா செய்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி எழுந்தது.
இதைத்தொடர்ந்து பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது.அதன்படி தற்போது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி இருந்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதியுடன் இவர் பதவிக்காலம் முடிவடைந்தது.
ஆகவே புதிய தலைமை நீதிபதியாக பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவு செய்தது.கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜீப் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இதனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி பதவியேற்க உள்ளார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8,…
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில்…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள்…
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…