கோவையில் உள்ள பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி 7 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தார் .அப்போது அந்த சிறுமி காணாமல் போனார். இதை தொடர்ந்து அந்த சிறுமியின் தயார் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை இதை தொடர்ந்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையெடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணையை தொடங்கினர். பின்னர் 27-ம் தேதி அந்த அவர் வீட்டின் அருகே கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். பின்னர் அந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்ததது.
இந்நிலையில் மார்ச் 31-ம் தேதி போலீசார் நடத்திய விசாரணை மூலம் அதே பகுதியை சார்ந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு கோவையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இருதரப்பு வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்தால் தீர்ப்பு இன்று வெளியாக இருந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சிறுமியை வன்கொடுமை செய்ததில் மேலும் ஒருவர் தொடர்பு இருப்பதாக டிஎன்ஏ சோதனையில் நேற்று தெரியவந்து உள்ளது.
இதையெடுத்து சிறுமியின் தாய் நேற்று தனது மகள் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி கோவை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் சந்தோஷ்குமார் குற்றவாளி என கூறி தீர்ப்பளித்தனர்.
சந்தோஷ்குமார் தண்டனை குறித்து 3 மணியளவில் அறிவிக்கப்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.மேலும் சிறுமியின் தாய் நேற்று சிறுமியை வன்கொடுமை செய்ததில் மேலும் ஒருவர் தொடர்பு இருப்பதாக தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…