எஸ்.பி.பி அவர்களை சந்திக்க மனைவி சாவித்ரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
தமிழ் திரை உலகின் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பதாக எஸ்பிபியின் உடல்நிலை தேறி வருவதாகவும் விரைவில் அவர் பூரண சுகமடைந்து வீடு திரும்புவார் எனவும், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் குடும்பத்தினரால் கூறப்பட்டதால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சி உண்டாகியது.
இந்நிலையில் தற்போது எஸ் பி பி யின் உடல் நிலையில் திடீரென மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று தகவல் அளித்ததை தொடர்ந்து எஸ்பிபி அவர்களின் குடும்பத்தினரை மருத்துவமனைக்கு வருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சிகிச்சை பெற்று வரக்கூடிய மருத்துவமனையில் அவரது மனைவி சாவித்திரி, மகன் சரண் மற்றும் மகள் பல்லவி ஆகியோர் தற்பொழுது வருகை தந்துள்ளனர்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…