தமிழகத்தில் பள்ளிகள் எப்பொழுது திறக்கும் மற்றும் திறக்கும் தேதி குறித்து மத்திய அரசு தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசின் கேள்விக்கு பதிலளித்து தமிழக அரசு கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை;இது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கவும், முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் துவங்கப்பட வில்லை என்றும் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே பாடம் படிக்கின்ற வகையில் ‘வீடியோ’ மூலமாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள் தரப்பில், ‘ஆன்லைனில்’ வகுப்புகளை நடத்துகின்றன.
இந்நிலையில் ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வரும் நிலையில், விரைவில் பள்ளிகளை திறந்து, இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து உள்ளதாகவும் இதுதொடர்பாக, மத்திய அரசின் சார்பில், மாநில பள்ளி கல்வித் துறை அதிகாரிகளிடம், ஆன்லைன் வாயிலாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு உள்ளது.
அதில், பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்தும், விவாதிக்கப்பட்டதாகவும் அப்போது, ஒவ்வொரு மாநில அரசும், தங்கள் மாநிலத்தில், கொரோனா தொற்று நிலையை பொறுத்து, பள்ளிகளை திறக்கும் தேதியை முடிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக, பெற்றோர் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை கேட்டு பெற வேண்டும் என்றும் மத்திய மனிதவள அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.மேலும், பள்ளிகளை திறக்கும் தேதி குறித்து, முதற்கட்ட அறிக்கையையும் ஒவ்வொரு மாநில அரசும் தாக்கல் செய்து விட்டது அந்த அறிக்கையில், ஒவ்வொரு மாநிலமும், பள்ளிகளை மீண்டும் திறக்க உள்ள மாதத்தையும் அறிவித்து விட்டநிலையில் தமிழ்நாடு மட்டும் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று, தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து இந்த வாரத்தில் முடிவு எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு, மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…