தமிழகத்தில் நாளை முதல் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஒரு வருட காலமாக போக்குவரத்து, பள்ளி கல்லூரிகள், தொழிற்சாலைகள் என அனைத்துமே முடக்கப்பட்ட நிலையில் தான் இருந்தது. கடந்த சில மாதங்களாக தான் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு சில தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து பல கட்டமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வந்தது. பொது தேர்வு நடைபெற இருப்பதை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வந்த நிலையில், அண்மையில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வைக்கலாம் என இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. அதன்படி வருகிற செவ்வாய்க் கிழமை அதாவது நாளை முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது எனவும், பெற்றோர்களின் விருப்பப்படி ஒப்புதல் கடிதம் பெற்ற மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் எனவும் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை எப்பொழுதம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் போன்ற பாதுகாப்புவழிகாட்டுதலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இதை கண்காணிப்பதற்காக கல்வித்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…