பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து வரும் 12ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பரவிய கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கடந்த 7 மாதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
அண்மையில், வருகின்ற 16-ம் தேதி பள்ளிகள் கல்லூரிகள் திறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளும், அனைத்து இளநிலை படிப்பு துவங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
இதற்காக, நேற்று பள்ளிகள் திறப்புக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றுது. கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு என்ன நிலை என கேட்டு இருந்த நிலையில், நவம்பர் 16-ம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லுரிகள் திறக்கப்படுவது குறித்து வரும் 12ம் தேதி முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தமிழகத்தில் வருகின்ற 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் விடுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…