நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்தது.ஆனால் இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதனைக்கண்டித்து போராட்டங்கள் மிகவும் தீவிரகமாக நடைபெற்றது.ஒரு புறம் ஆதரவாகவும் போராட்டம் நடைபெற்றது.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
அந்த வகையில் தான் கோவை மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாலத்தில் கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார்.அப்போது அவர் குடியுரிமை திருத்த சட்டத்தை குறித்து பேசினார்.மத்திய அரசு பல விமர்சனங்களை முன்வைத்தார்.
இதனிடையே தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 22-ஆம் தேதி கோவை மாவட்டத்தில் நடைபெற்ற குடியுரிமை போராட்டத்தில் அரசுக்கு எதிராகவும்,இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வகையில் பேசியதாகவும் கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…