ADMK Ex minister Sellur raju [Image source : Twitter/@SellurRajuOffl]
மக்களை விரைவாக சந்திக்க வேண்டும் என்பதற்காக தான் இபிஎஸ் கார் வாங்கியுள்ளார் என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு இபிஎஸ் புதிய அகார் பற்றி பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வாங்கிய புதிய கார் பற்றி கேட்கையில், மக்களை விரைவாக சந்திக்க புதிய கார் வாங்கியுள்ளார் என்றார்.
மேலும், அதிமுகவின் வெற்றிப்பயணத்தை துவங்க, மக்கள் பணிகளை விரைவாக முடிக்க இபிஎஸ் கார் வாங்கியுள்ளார் என கூறினார். அடுத்து மாமன்னன் படம் பற்றி கேட்டபோது, நான் இன்னும் படம் பார்க்கவில்லை. படம் பார்த்தபிறகு கூறுகிறேன் என செல்லூர் ராஜு தெரிவித்தார்.
பாஜவுடனான கூட்டணி பற்றி கேட்கையில், மக்களுக்கு எது நல்லதோ அதனை செயல்படுத்துவோம். பாஜக கூட்டணி பற்றி எங்கள் கட்சி பொதுச்செயலாளர் (எடப்பாடி பழனிச்சாமி) முடிவெடுப்பர் அதனை நாங்க ஏற்றுக்கொள்வோம் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…