திருமணவேல் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்த செல்வன் என்ற இளைஞரை நிலத்தகராறு காரணமாக கடந்த 17-ஆம் தேதி காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். அதிமுகவின் தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் திருமணவேலனுக்கும் ,செல்வனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.திருமணவேல் கூறியதன் அடிப்படையில் செல்வன் மற்றும் அவரது சகோதரர் மீது தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன் பொய் வழக்கு பதிவு செய்து துன்புறுத்தியதாக செல்வனின் தயார் புகார் அளித்தார். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் திருமணவேல், முத்துகிருஷ்ணன் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்துள்ளனர் என்று தூத்துக்குடி எஸ்.பி தெரிவித்திருந்தார்.மேலும் இளைஞர் செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய திருமணவேல் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் , முதலமைச்சருமான பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.மேலும் அதிமுகவினர் யாரும் திருமணவேலுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…