மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் பொறுப்பாசிரியராக இருந்தவர், பத்திரிகையாளர் சுதாங்கன். இவர் தினமணி நாளேடு, தமிழன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நாளிதழ்களில் பொறுப்பாசிரியராக பணியாற்றி வந்தார். அதுமட்டுமின்றி, பல தொலைக்காட்சிகளிழும் அவர் பணியாற்றி வந்தார்.
இவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இவரது மறைவு குறித்து பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர் திரு.சுதாங்கன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…