Minister Senthil balaji -- Supereme court [File Image]
செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த மாதம் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையானது சட்டப்படி நடைபெறவில்லை எனவும், அவரை விடுவிக்க வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவானது முதலில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.
அப்போது இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்தார். அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என்றும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கதுறைக்கு அதிகாரம் உள்ளது என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அடுத்து தற்போது செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற மூன்றாம் நீதிபதியின் உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான நீதிபதி அமர்வு முன், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை தவறான தகவல்கள் கூறியுள்ளது என்று கபில் சிபில் குறிப்பிட்டார். இந்நிலையில் இந்த மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…