கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள அடையாறு காவல்த்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்தார்.
மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் இதனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவே தன்னையும், தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, தன்னை கருக்கலைப்பு செய்யுமாறு வலுக்கட்டாயப்படுத்தியதாக நடிகை புகார் அளித்துள்ள நிலையில், எந்த மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்துள்ளார் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.
அதன்படி கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் தான் கருக்கலைப்பு செய்ததாக புகார் அளித்திருந்த நிலையில், கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள அடையாறு காவல்த்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…