அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை குறித்த ஆதாரங்களை திரட்ட தனிப்படை போலீசார் ராமநாதபுரம் விரைந்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்தார்.
மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் இதனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவே தன்னையும், தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக உள்ள நிலையில், மணிகண்டனை குறித்த ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். எனவே, ஆதாரங்களை திரட்ட தனிப்படை போலீசார் ராமநாதபுரம் விரைந்துள்ளனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…