தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த வில்வ மரத்துபட்டியை சேர்ந்த ராஜப்பா என்பவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த வில்வ மரத்துபட்டியை சேர்ந்தவர் ராஜப்பா. இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து இவருக்கு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த தேதி குறிப்பிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி அவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு அடுத்த தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான தேதி வந்ததையடுத்து, சுகாதார ஊழியர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை அழைத்த நிலையில், அவரது குடும்பத்தினர் ராஜப்பா உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி ராஜப்பாவுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அவர் பேரிலோவன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து அவருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக குருஜிச்செய்தி வந்ததையடுத்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…