தமிழின் தொன்மையை கண்டு சிலருக்கு வயிறு எரிகிறது – அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழின் தொன்மையை கண்டு சிலருக்கு வயிறு எரிவதால் அகழாய்வுகள் தேவையற்றது என எழுதிக்கிறார்கள் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடி உள்ளிட்ட அகழாய்வில் தமிழின் தொன்மையை நிரூபிக்கும் வகையில் சான்றுகள் கிடைத்து வருகின்றன. 2 நாட்களுக்கு முன்பு கீழடியில் 146 செமீ பூமிக்கு அடியில் வெள்ளியிலான முத்திரை பதித்த காசு கிடைத்துள்ளது.

கீழடியில் கிடைத்த பொருட்களால் தமிழரின் தொன்மை கிமு.6ஆம் நூறாண்டுக்கு முந்தையது என தெரிய வந்துள்ளது. அகழாய்வு மூலம் தமிழகத்தில் அகச்சான்று, புறச்சான்று மற்றும் அறிவியல் சான்று நமக்கு கிடைத்து வருகிறது. தமிழின் தொன்மையை நிரூபிக்கும் வகையில் இத்தனை சான்றுகள் கிடைக்கின்றபோது, அதனை ஏற்றுக்கொள்வதற்கு சிலருக்கு மனம்வரவில்லை.

தமிழின் பெருமை, தமிழரின் பெருமை உலகளவில் வருவதில் சிலருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நன்றாக எரியட்டும். தமிழகத்தில் நடக்கும் தொல்லியியல் ஆய்வுகள் மூலம் தமிழின் பெருமையை எடுத்துரைக்கிறது. அவர்களுக்கு வயிறு எரிவதை பற்றி எங்களுக்கு கவலையில்லை, நாங்கள் தொடர்ந்து அகழாய்வு பணியை மேற்கொள்வோம் என கூறினார்.

மேலும், தமிழ் நாகரிகத்தின் தொன்மையை, நாம் அடைந்திருக்கக் கூடிய சான்றுகள் வாயிலாக அறிவியல் பூர்வமாக தொடர்ந்து நிறுவோம் என்றும் சிலருக்கு வயிறு எரிவதால் அகழாய்வுகள் தேவையற்றது என எழுதிக்கிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார். வார இதழ் ஒன்றில் தொல்லியல் துறை குறித்து விமர்சித்து எழுதப்பட்டியிருக்கும் நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!

பிளே ஆப் சென்ற மும்பை….. டெல்லியை வீழ்த்தியதற்கு முக்கிய காரணங்கள் இதுதான்!

மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…

23 minutes ago

MI vs DC: டெல்லியை வீழ்த்தி.., பிளே ஆஃப்-யில் மாஸ் என்ட்ரி கொடுத்த மும்பை.!

மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…

7 hours ago

அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா?

சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…

8 hours ago

ஆரம்பத்தில் திணறிய மும்பை.. வெளுத்து வாஙகிய சூர்ய குமார்.! டெல்லி அணிக்கு இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

175 பில்லியன் டாலரில் அமெரிக்காவை பாதுகாக்க `கோல்டன் டோம்’.., டிரம்ப் அறிவித்த திட்டம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…

10 hours ago

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்.? ஊர்ந்தீர்களா? தவழ்ந்தீர்களா? ஸ்டாலின் மீது இபிஎஸ் விமர்சனம்.!

சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…

10 hours ago