தென்காசியில் திருமணம் செய்து வைக்காததால் தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள ஊத்தன்குளம் பகுதியை சேர்ந்த 70 வயது மாடப்பன் என்பவருக்கு 33 வயது மகன் ஒருவர் உள்ளார். அவருக்கு 33 வயது ஆகியும் அவர் வேலைக்கு செல்லாததால் இன்னும் இவருக்கு திருமணம் செய்து வைக்கவில்லை. இந்நிலையில், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு குடும்பத்தினரிடம் அடிக்கடி செல்வராஜ் கேட்டு வந்துள்ளார். ஆனால் வேலைக்கு செல்லாதவனுக்கு எவ்வாறு திருமணம் தேடுவது என எண்ணி குடும்பத்தினர் திருமணத்திற்கான முயற்சி எதையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், இதற்காக நேற்று முன்தினம் இரவு தனது தந்தையிடம் தகராறு செய்த செல்வராஜ் அந்த பிரச்சனையில் அவரது தந்தை தலையில் கட்டையை வைத்து தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த மாடப்பன் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். அவரது தந்தையை அடித்துக் கொலை செய்த மகன் செல்வராஜை கைது செய்துள்ளனர்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…