[Image source : EPS]
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் ஊர் திரும்பும் மாணவர்கள் வசதிக்காக 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 12 திங்கள் கிழமை அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. ஏற்கனவே 2 முறை பள்ளிகள் திறப்பு மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக வரும் 12ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்று மீண்டும் வீடு திரும்ப உள்ள பள்ளிமாணவர்களுக்கு எதுவாக இன்று (ஜூன் 9) , நாளை (ஜூன் 10), நாளை மறுநாள் (ஜூன் 11) என வெள்ளி , சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தமிழகத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு சுமார் 650 பேருந்துகளும், சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்டட் முக்கிய நகரங்களுக்கு சுமார் 850 பேருந்துகளும் என மொத்தமாக 1500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இந்த மூன்று நாளில் இயக்கப்பட உள்ளது என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…