கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் திருச்சி ராமேஸ்வரம் இடையே நேற்று முதல் இயக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்பொழுது வரை அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. பேருந்துகள் இயக்கம் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சில ரயில் சேவைகளுக்கும் படிப்படியாக கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டு வந்தது. தற்பொழுது 9 மாதத்திற்கு பிறகு திருச்சி ராமேஸ்வரம் இடையே நேற்று முதல் மீண்டும் சிறப்பு ரயில் சேவை தொடங்கியுள்ளது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 7 மணிக்கு 10 பெட்டிகளுடன் ரயில் புறப்பட்டது, இதனையடுத்து பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இந்த ரயிலில் முன்பதிவு செய்து மட்டுமே பயணம் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து தினமும் இரண்டு ரயில்கள் சென்னைக்கும், வாரத்தில் ஒருமுறை ஒடிசா மாநிலம் செல்லும் ஓகா எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…