Ma.subramaniyan [Imagesource : Representative]
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை மாநகராட்சி, ஆழ்வார்பேட்டை, சி.பி.ராமசாமி சாலை, பீமனம்பேட்டை நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாமினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
இந்த முகாமை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், புயல் பாதிக்கபட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 மாதம் தொடங்கி 15 வயது வரையான குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது.
எங்கள் வரிப்பணம் தானே..? அவங்க அப்பன் வீட்டு பணத்தையா கேக்குறோம்.? – அமைச்சர் உதயநிதி விளாசல்.!
ஏற்கனவே குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், மழைக்கால நோய்களில் இருந்து குழந்தைகளை காக்கும் வண்ணம், மேலும் ஒரு தடுப்பூசி குழந்தைகளுக்கு போடலாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நான்கு மாவட்டங்களிலும், நடமாடும் மருத்துவ வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், 160 வாகனங்கள் சென்னையில் இயங்கி வருகிறது. இதுவரை ஒட்டுமொத்தமாக நடத்தப்பட்டுள்ள 7 வார முகாம்களில் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.
சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அங்கன்வாடி மையங்கள் , ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்களில் டிச.13ம் தேதி முதல் டிச.30 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…