மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், மீனவர் ஒருவரின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.
நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த கௌதமன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 28ஆம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இவர்களின் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில படகில் இருந்த நாகை அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர் கலைச்செல்வன் என்பவரின் தலையில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திங்கட்கிழமை காலை நாகை மீனவர்கள் கரை திரும்பிய பின், உடனடியாக கலைச்செல்வன் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாகை மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…