காங்கிரஸ் மூத்த தலைவர், சிபிஎம் மாநிலச் செயலரிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலுவிடம் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025