நீட் தேர்வு குறித்து பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் – ஸ்டாலின்..!

3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. அப்பொழுது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
சட்டப் பேரவை இன்று ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2-வது நாளாக சட்டப் பேரவை தொடங்கியது. இந்நிலையில், நீட் தேர்வு மனஅழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது,தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் மு .க ஸ்டாலின் கொண்டு வந்தார். நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், நீட்-க்கு எதிராக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு இதுவரை ஒப்புதல் வாங்கவில்லை எனவும் ஸ்டாலின் கூறினார்.
இதையடுத்து, தமிழக சட்டப் பேரவையில் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி நீட்தேர்வு கொண்டுவந்தபோது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு கூட்டணியில் திமுக இருந்ததா..? இல்லையா..? என கேள்வி எழுப்பினார்.