MinisterPeriyakaruppan [File Image]
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளியை கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைவாக இருப்பதால் தக்காளி விலை ஒரு கிலோவிற்கு 100 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தக்காளியை ஏற்றத்தை குறைக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்தினார். விலையேற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எச்சரித்துள்ளார்.
இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கனிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது. சென்னை, கோயம்பேடு மார்கெட்டிற்கு 800 டன் அளவில் வரக்கூடிய தக்காளி வரத்து, தற்போது 300டன் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது.
இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.68 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது வெளிச்சந்தையுடன் ஒப்பீடுகையில் ரூ.28 முதல் ரூ.32 வரை குறைவானதாகும். மேலும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60 முதல் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த விலையேற்றம் தற்காலிகமானதே விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி மற்றும் காய்கறிகளை வாங்குமாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணியும், கடைசி இடத்தில் இருக்கும்…
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி…
சென்னை : நேற்று டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்காக பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சில…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கருண் நாயர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசு, தமிழ்நாட்டில் தனது ஆட்சியின் ஐந்தாவது ஆண்டில்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள்…