அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ள நிலையில் கல்லூரிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளின் விவரங்கள் இன்று தேர்ந்தெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2020-2021ம் ஆண்டிற்கான அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 20ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைப்பெற்றது.
தமிழகத்தில் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் 95ஆயிரம் இடங்கள் மட்டுமே காலியாகியுள்ள நிலையில், கல்லூரியில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கைக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இன்று கல்லூரியில் சேர்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும், இமெயில் வாயிலாகவும் மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகளையும் , கட்டண விவரங்களையும் அந்தந்த கல்லூரிகளின் வாயிலாக தெரிவிக்கப்படவுள்ளது.
அதனையடுத்து முதற்கட்ட மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதில் ஆகஸ்ட் 28-ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான மாணவர் சேர்க்கையும், அதற்கு மறுநாள் (ஆகஸ்ட் 29) முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை பொது பிரிவினருக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெறவுள்ளது.
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…