அண்மையில் சென்னை நந்தனத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டிருந்தது. அதில், அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பனை செய்ததாக கூறி , பத்திரிக்கையாளர் அன்பழகன் வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பலரும் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் ‘கீழடி ஈரடி’ எனும் தலைப்பில் உரையாற்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான எழுத்தாளர் சு.வெங்கடேசன் அழைக்கப்பட்டிருந்தார். அவர் மேடையில் பேசுகையில், நான் கீழடி ஈரடி பற்றி பேசப்போவதில்லை என கூறினார். மேலும், பபாசியின் நடவடிக்கை கருத்துரிமைக்கு எதிரானது. கருத்து சுதந்திரத்தை காவு கொடுக்கக்கூடாது.
அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கக்கூடாது என்றால், சமையல் குறிப்பு புத்தகம் கூட விற்கக்கூடாது. ஏனென்றால், அதில் வெங்காயம் பற்றி இருக்கிறது. அதே போல உப்பு பற்றியும் இருக்கிறது. அது மாநில அரசுக்கு எதிரானது. என கருத்து தெரிவித்தார். அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்கக்கூடாது என்றால், காந்தி, அண்ணா, அம்பேத்கர் ஆகியோர் எழுதிய புத்தகங்களை கூட விற்கக்கூடாது. என தனது அதிருப்தியை தொடர்ந்து வெளியிட்டு, விழாவில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…