இந்த காலத்தில் இப்படி ஒரு நபரா.?உண்மையான காதலை வெளிப்படுத்திய இளைஞன்!

Published by
Sulai
  • தனது காதலனுடன் தனக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறியதை நம்பி மகிழ்ச்சியுடன் கிளம்பி வந்த இளம்பெண்.காதல்நின் தந்தை செய்த கொடுமை.
  • ஊர் மக்கள் அனைவரையும் வியப்படைய செய்த காதலன்.

நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பு நித்தியானந்தம் ஆவார்.அமமுக நிர்வாகியாக உள்ள இவர் ஜவுளி கடை வைத்துள்ளார்.இவரது மகன் முகேஷ் கண்ணன் ஆவார்.

இவர் கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் படிக்கும் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.தற்போது இருவரும் சென்னையில் வேலைபார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த காதல் விவகாரம் முகேஷு கண்ணனின் தந்தை நித்யானந்தத்திற்கு தெரியவந்துள்ளது.அந்த பெண்ணிடம் செல்போனின் பேசிய அவர் உன்னை என் மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அது குறித்து உன்னிடம் பேச வேண்டும் என் வீட்டிற்கு தனியாக வா என்று அழைத்துள்ளார்.இந்நிலையில் கடந்த 28-ம் தேதி அந்த பெண் சென்னையில் இருந்து கிளம்பி நித்யானந்தத்தின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்ட நித்தியானந்தம்,வீட்டில் இருந்த தாலியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தில் பலவந்தமான முறையில் கட்டியுள்ளார்.இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் அவரை மிரட்டிய நித்தியானந்தம் 2 நாட்கள் வீட்டிலேயே அடைத்து வைத்து தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார்.பின்பு அவுரிக்காட்டை சேர்ந்த தனது நண்பன் சக்திவேல் வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று அடைத்து வைத்துள்ளார்.

இதனிடையே இந்த விவகாரம் முகேஷ் கண்ணனுக்கு தெரிய வர அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவுரிக்காடு சென்று காதலியை மீட்ட அவர் ,தனது தந்தை கட்டிய தாலியை அறுத்து எறிந்துள்ளார்.இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த மகளீர் காவல்துறையினர் நித்தியானந்தம் ,அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர் சக்திவேல் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண்ணை முகே‌‌ஷ்கண்ணன் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததால் தனது தந்தையால் அந்த பெண்பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அவரை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

இருப்பினும் அந்த பெண் மீது கொண்ட உண்மையான காதலினால் அந்த பெண்ணை கைவிடவில்லை.அவரையே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.அதன்படி நேற்று முன்தினம் இரவு ஒரு கோவிலில் ஊர்மக்கள் முன்னிலையில் அந்த பெண்ணை முகேஷ் கண்ணன் திருமணம் செய்துள்ளார்.

பின்னர் புதுமண தம்பதிக்கு ஊர் மக்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 minutes ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

2 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

3 hours ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

19 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

19 hours ago