Finance Minister Nirmala Sitharaman - Tamil Nadu CM MK Stalin meeting. [Image Source : Twitter/@ NSitharamanOffice]
டெல்லி விமான நிலையத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் – முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு.
டெல்லி வந்திருந்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் சென்றபோது, அங்கு ஏற்கனவே மும்பை செல்வதற்காக வந்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர்.
இந்திரா காந்தி விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், மும்பை செல்வதற்காக டெல்லி விமான நிலையம் சென்றபோது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்ததாக பதிவிட்டுள்ளார்.
கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1000 படுக்கைகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறந்து அழைப்பு விடுக்க டெல்லி சென்ற முதலமைச்சர் முக ஸ்டாலின், குடியரசு தலைவர் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து முறையாக அழைப்பு விடுத்தார். இந்த சமயத்தில், குடியரசு தலைவர் மாளிகையில் திரௌபதி முர்முவை சந்தித்த நிலையில், விமான நிலையத்தில் மத்திய நிதியமைச்சரை சந்தித்துள்ளார் முதலமைச்சர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…