SuVenkatesan: இந்தியா என்ற பெயரை மாற்ற ரூ.14,000 கோடி!- எம்பி சு.வெங்கடேசன் பகிர் தகவல்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. உச்சி மாநாடு தொடங்கும் 9-ம் தேதி இரவு விருந்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்க இருக்கிறார். இதற்காக இந்திய குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ ஜி20 கூட்டத்தின் சிறப்பு விருந்து அழைப்பிதழ்கள் நேற்று காலை முதல் பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு அனுப்பப்பட்டது. அந்த அழைப்பிதழ்களில் வழக்கத்துக்கு மாற்றாக ‘இந்திய குடியரசு தலைவர்’ என்பதற்கு பதிலாக ‘பிரசிடெண்ட் ஆஃப் பாரத்’ என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தியா என்ற நாட்டின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு ஆயுதமாகி வருவதாக கூறப்படுகிறது. இதற்கான மசோதா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என பெயர் மாற்றம் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான விவாதத்தை உருவாக்கி, தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டின் பெயர் மாற்றத்துக்கு ஒருபக்கம் பாஜகவினர் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் விமர்சித்தும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டியதால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பயந்து நாட்டின் பெயரை மாற்ற முயற்சிக்கிறது என கூறி வருகின்றனர். அந்தவகையில், நாட்டின் பெயர் மாற்றம் குறித்து நேற்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், தமிழ்நாடு” என்ற பெயரை மாற்ற முயற்சித்தவர்கள் இப்பொழுது “இந்தியா” என்ற பெயரை மாற்ற முயற்சிக்கின்றனர்.

இந்தியாவைக் கண்டு பிரிட்டீஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுகிறவர்களாக பாஜக வினர் மாறியுள்ளனர். பெயர் மாற்றத்திற்கு பின்னால் இருப்பது தேசப்பற்றல்ல, தேர்தல் பயம். இந்தியா வெல்லும் என கூறியிருந்தார். இதுபோன்று  இன்று அவரது பதிவில், அரசியல் சாசனத்தின் முதல் வரியான “இந்தியாவின் மக்களாகிய நாங்கள்” (We, the people of India) மீதே பா.ஜ.கவின் தாக்குதல். இந்தியா என்ற பெயரை மாற்ற ஆகக் கூடிய ரூ 14000 கோடி, தமிழ்நாட்டின் 17 லட்சம் 1 -5 வகுப்பு மாணவர்களுக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலவுக்கு சமம் என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

9 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

9 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

10 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

10 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

11 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

11 hours ago