ஆகஸ்ட் 14ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

Sweet Pongal - Tamilnadu Govt

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்தாண்டு முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 14-ம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கப்பட இருந்த இனிப்பு பொங்கல், கோடை விடுமுறை முடிந்தும் பள்ளிகள் திறக்கப்படாததால் அப்போது வழங்கப்படவில்லை. இதனால், ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்