Annamalai BJP State President [The Hindu]
தமிழக முதல்வர் தனது கருத்தை மாற்றி மாற்றி பேசுகிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் மாதம் 2018ஆம் ஆண்டு தனது டிவிட்டர் பக்கத்தில், அதிமுக ஆட்சி காலத்தில், குட்கா வழக்கில் முறைகேடு தொடர்பாக அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய (அப்போதைய) முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்தால் ஆளுநர், அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
அதேபோல, 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ஊழல் பற்றி பொது மேடையில் ஆளுநர் பேசி எந்த பயனும் இல்லை. அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், சட்ட விரோதமாக செயல்படுபவர்களை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டு பேசியிருந்தார். ஆனால் தற்போது ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை என அவர் மாற்றிப் பேசுகிறார் என்று முதல்வர் மீது தனது விமர்சனத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் 1971 இல் உச்சநீதிமன்றமானது, ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது, பதவி பிரமாணம் செய்து வைக்கும் ஆளுநருக்கு அதனை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரமும் இருக்கிறது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என குறிப்பிட்டு பேசினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…