டெல்லி சென்றடைந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட உள்ளது.
இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை சென்னை விமான நிலையம் வந்து, தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தற்போது, டெல்லி சென்றடைந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எம்.பி.க்கள் ஜெகத்ரக்ஷகன், பழனிமாணிக்கம், ராஜேஷ்குமார், எம்.எம்.அப்துல்லா, கதிரானந்த் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்றனர். இன்னும் சற்று நேரத்தில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்திக்க இருக்கிறார்.
தாமதம் ஏன்:
நேற்று இரவு டெல்லி புறப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அப்போது, நேற்று முதல்வர் டெல்லி செல்லவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக விமானம் தாமதமான நிலையில், இன்று காலை புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025