சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்கு நேரில் சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து திமுக எம்.பி ஆ.ராசா மற்றும் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விஜயகாந்திடம் நலம் விசாரித்தனர். இந்த சந்திப்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் முதல்வரிடம், வியாஜயகாந்த் வழங்கியதாக கூறப்படுகிறது.
திமுக, அதிமுக தலைமையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அமைந்த கூட்டணி வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தேமுதிகவின் நிலைப்பாடு என்னவென்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சூழலில் விஜயகாந்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த மாதம் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன், முதல்வர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்தை நேரில் சந்தித்தார். அவருடைய உடல்நிலை குறித்து கேட்டறிந்த உதயநிதி தேர்தல் வெற்றிக்காக விஜயகாந்திடம் இருந்து வாழ்த்துக்களையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…