‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், மக்களின் நாடியை நன்கு அறிந்தவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என புகழாரம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய கூட்டரங்கில் தொடங்கியுள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், முதல்வரின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் பிரதியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட, அமைச்சர் துரை முருகன் பெற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், தமிழ்நாடு தனித்துவமான சமூகமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. தமிழகத்தின் சமூக நீதி இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் லாலு பிரசாத். மக்களின் நாடியை நன்கு அறிந்தவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். இந்த புத்தகத்தை படித்ததன் மூலம் வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…