தமிழகத்தில் குடியுரிமை சட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் மீண்டும் தொடங்கி உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடக்கும் போராட்டம் தற்போது பெரிய அளவில் ஆதரவை பெற்று வருகிறது.இந்நிலையில், குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக நாளை தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்தது. இந்நிலையில், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்து. இதில், இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய மக்கள் மன்ற நிர்வாகி வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் முக்கிய உத்தரவுகள் இன்று பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சென்னையில் அமைதியான முறையில், போராட்டங்கள் நடத்த 13 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் செய்ய அனுமதிக்க முடியாது. சென்னை மாநகர காவல்துறை போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்டது. இதனால் அந்த போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், திட்டமிட்டப்படி நாளை சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு தற்போது அறிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில், தேசியக் கோடி ஏந்தி அமைதியான முறையில் வரம்பு மீறாத வகையில் போராட்டம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…