கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ,அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன.தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக ,திமுக ,மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி உள்ளன.அந்த வகையில் தேசிய கட்சியான காங்கிரஸ் ராகுலின் தமிழ் வணக்கம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி பொங்கல் தினத்தன்று தமிழகம் வந்த ராகுல் காந்தி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார்.
இதனிடையே வருகின்ற 23-ஆம் தேதி மீண்டும் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே ராகுல் காந்தி தமிழக வருகையையொட்டி அதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S.அழகரி அவர்கள் முன்னிலையில் திருப்பூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.ஆலோசனைக்கு பின் கே.எஸ்.அழகிரி பேசுகையில், கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதில் சிக்கல் இல்லை. அவரை கூட்டணிக்கு வரவேற்கிறோம்.எங்களுடன் கமல் சேர வேண்டும்.அவர் பிரிந்து நின்றால் கண்டிப்பாக அது வாக்குகளை சிதறடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…