அரியர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது தவறானது என்று ஏஐசிடிஇ தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக கல்லூரி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வை தவிர மற்ற அனைத்து பருவ தேர்வுகளுக்கும் தடை விதித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் பழனிசாமி. மேலும் அரியர்ஸ் எழுதுவதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரான சூரப்பா, அரியர் மாணவர்களுக்கு தேர்வை நடத்தி தேர்ச்சியை அறிவிக்க வேண்டும் என்பது தான் ஏஐசிடிஇ-ன் விதி என்றும் கூறியிருந்தார் . இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், தமிழக அரசிற்கு அர்யர் தேர்வு தொடர்பாக எந்த கடிதமும் ஏஐசிடிஇ மற்றும் யுஜிசி-யிடம் இருந்து வரவில்லை. அவ்வாறு ஒரு கடிதம் வந்திருந்தால் அதை சூரப்பா வெளியிட வேண்டும் என்றும் கூறினார்.
இதன் பின்னர் அரியர்ஸ் தேர்ச்சி விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, ஏஐசிடிஇ கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி அனுப்பிய கடிதம் வெளியாகியது.அந்த கடிதத்தில், அரியர்ஸ் மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தால் எந்த தொழில் நிறுவனமும், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்காது.மேலும் உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைகழகத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுதே கூறுகையில் ,அரியர் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது தவறானது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பாவுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் கூறியிருந்தேன்.அரியர் தேர்வுகள் தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…