இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதி.. அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டம்!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாட்டில் உள்ள இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இ சேவை மையங்களை DigiPay வரம்பிற்குள் கொண்டுவந்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இ-சேவை மையங்களில் ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலக பகுதிகளிலும்,  கிராமபுற பகுதிகளிலும் தமிழக அரசின் பொது இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இ-சேவை மையங்கள் மூலம், அரசு சார்ந்த பல சான்றிதழ்கள் எடுத்தல், ஆதார் உள்ளிட்ட கார்டுகள் திருத்தம் செய்தல் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்த நிலையில், இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த தகவல் தொழில்நுட்பத் துறை திட்டமிட்டு உள்ளது. வங்கி ஏடிஎம்கள் தவிர, பொதுத்துறை நிறுவனமான இந்திய அஞ்சல் துறை ஏடிஎம் மற்றும் பணம் பெறும் கார்டு வசதிகளை பெற்றுள்ளது, அதுபோல தற்போது இ-சேவை மையத்தையும் மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் இனி இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியா அறிமுகமாகவுள்ளது. இந்த வசதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

4 minutes ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

2 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

2 hours ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

3 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

3 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 hours ago