டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக அரசு மற்றும் ஆளுநர் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தியிருந்தார். அப்போது பேசிய ஆளுநர், நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து போடமாட்டேன், நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார். ஆளுநரின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை குரோம்பேட்டையில் இரண்டு முறை முயற்சி செய்தும் நீட் தேர்வு தோல்வியால் மாணவன் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்துகொண்டார். இவரை தொடர்ந்து தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர் மற்றும் அவரது தந்தைக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர், நீட் எதிரான மசோதாவுக்கு கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் வரும் 20-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத அறப்போர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக திமுக உண்ணவிரோத போராட்டம் அறிவித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அதன்படி, இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் 20ம் தேதி மாலை சென்னை திரும்புகிறார் என கூறப்படுகிறது.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை ஆளுநர் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  திமுக உண்ணாவிரதப் போராட்டம் 20ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் திடீர் டெல்லி சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக அரசு மற்றும் ஆளுநர் இடையே கருத்து மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…

37 minutes ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து! காரணம் இது தான் ரயில்வே துறை விளக்கம்!

கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…

2 hours ago

கடலூர் விபத்து : ரயில்வே கேட் அருகே நின்றிருந்தவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…

2 hours ago

நாளை முழுவதும் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது ஸ்ட்ரைக்! என்ன காரணம்?

சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…

3 hours ago

சென்னையில் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு! ஆவணங்களை ரெடியாக வைத்திருக்க அறிவுறுத்தல்!

சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…

3 hours ago

கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து….3 பேர் பலி!

கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…

4 hours ago